HomeUncategorizedபட்டினச் சித்தர் ஞானம் 6 - 10 of 101 பாடல்கள்

பட்டினச் சித்தர் ஞானம் 6 – 10 of 101 பாடல்கள்

பட்டினச் சித்தர் ஞானம் 6 – 10 of 101 பாடல்கள்

6. இருவினைக்கு உளாகாதே என்னுடமைஎண்ணாதே
பெருகுசினங்கொண்டு பினத்தாதே – மருவுமலக்   
கள்ளமெலாம் விட்டுக் கரைந்து கரைந்துருகி
உள்ளுணர்ந்து நெஞ்சேபார் ஒன்று.

விளக்கவுரை :
    
7. ஒன்றும் அறியாதே ஓடி அலையாதே
சென்று மயங்கித் திரியாதே – நின்ற
நிலை பிரியா தேநெடிய னெஞ்சே கொடிய
புலைவினையும் மாற்றும் பொருள்.

விளக்கவுரை :

8. பொருளுடைமை நம்பாதே பொய்வாழ்வை நத்தாதே
இருளுறவை நம்பி இராதே – பொருளுறவு
கொண்டறிவி னாலே குறித்து வெளியதனைக்
கண்டுபிடித் தேறுநெஞ்சே காற்று.

விளக்கவுரை :
    
9. காற்றுடனே சேர்ந்து கனலுருவைக் கண்டவழி
மாற்றி இனிப்பிறக்க வாராதே – ஏற்றபடி
ஓடி அலையாதே ஓங்காரத் துள்ளொளியை
நாடியிருப் போம்மனமே நாம்.

விளக்கவுரை :

10. நானென தென்றுவினை நாடி அலையாதே
தானவனே யென்று தரியாய்நீ – ஏன்மனமே
வீணாவல் கொள்ளாதே மேலாம் பழம்பொருளைக்
காணாவல் கொள்ளாய் கருத்து.

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments