HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1361 - 1365 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1361 – 1365 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1361 – 1365 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1361. தெரிவித்தா ரஞ்சனங்கள்
மாரணங்கள் தெளிவான மோகனங்கள் வசியம்யாவும்
புரிவித்தார் வாதமுதல்
யோகமார்க்கம் புகழான ஸ்தம்பனமு மோகனந்தான்
பரிவித்தார் தேவதைகள்
வருகுமார்க்கம் பாங்கான செப்பிடுகல் வித்தைமார்க்கம்
அறிவித்தார்
கோகாணஜாலமார்க்கம் மகத்தான பிரம்மவித்தை மதீதந்தானே
விளக்கவுரை :
1362. அதீதமாம் சகலசித்து
வஷ்டசித்து அன்பான லோகமதில் பொடிகள்வித்தை
கதீதமாஞ் சக்கரங்கள்
காணமார்க்கம் கண்கட்டி வித்தைமுதல் ஜாலமார்க்கம்
பதீதமாம் பச்சிலையில்
வித்தைகோடி பகற்கால நட்சத்திரக் காலவித்தை
துரிதமுடன் மேகத்தில் பறக்கும்வித்தை
சூட்டினாரெந்தனுக்கு சூட்சம்பாரே
விளக்கவுரை :

[ads-post]
1363. சூட்சமுடன்
மோடியிலனந்தங்கோடி சொல்லவொண்ணா பரிசனங்கள் தூம்பரவேதை
மாட்சமுடனுழ்விடுவ தீதவித்தை
மகத்தான காலிகாஷாயமார்க்கம்
ஆட்சான வித்தைகளில்
துறைகள்கோடி அப்பனே கூறவொண்ணா குறளிவித்தை
தீர்க்கமுடன் தந்திரமா
யனந்தம்போக்கு திறமுனே யெமக்களித்தார் தெளிவாய்த்தானே
விளக்கவுரை :
1364. தெளிவான கடல்முகமாஞ் சாகரத்தில் திறளான மாயவனுங் கடந்தநீராம்
கனிவான வெண்ணெயது மெழுகுபோல
கடலோரம் பாறைகள்போல் மிதக்கும்வண்ணம்
மொலிவான நவகோடி ரிஷிகளப்பா
மயற்சஇயுடன் கடலோரந் தவமிருப்பார்
வெளியான சமாதியிடம்
சென்றுபோனேன் விருப்பமுட னெந்தனைநீ யாரென்றாரே
1365. ஆரென்று கேட்டவுட
னடியேன்தானும் அங்ஙனவே யடிவணங்கி தாழ்மைகொண்டு
ஊரொன்றுந்தெரியாமல்
குளிகைபூண்டு வுத்தமனே தேசம்விட்டு தேசம்வந்தேன்
காரென்று யெனைகார்க்க
யேழ்மைகொண்டு கர்த்தாவே கதியென்று சரணஞ்செய்து
மேரென்ற கிரியைவிட்டு
மேற்புரத்தில் மேன்மையுடன் காணவந்தேன் போகர்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments