HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1376 - 1380 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1376 – 1380 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1376 – 1380 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1376. காணவே செந்தூரம்
களஞ்சிதூக்கு கருவான வெண்காரம் காற்கழஞ்சி
தோணவே இரண்டுமொன்றாய்
தானரைத்து துப்புரவாய் ரவிதனிலே சரியாய்தூக்கி
மாணவே மூசைதனில்
செம்புருக்கி மதிப்புடனே கிராசமது தானேயீவாய்
பாணம்போல் செம்பதுவு
மூறல்நீக்கி பசுமைநிறம் செம்பொன்னு நிறமதாமே
விளக்கவுரை :
1377. நிறமான செம்பதனை
யெடுத்துப்பார்க்க கெடிதான வூறலதுவற்றுப்போச்சு
திறமான தங்கம்நிகர்
செம்புசேர்த்து திறலான மூசைதனிலுருக்கிப்பாரு
கறமான மாற்றதுவுமெட்டதாகும்
கருவான வெள்ளியது கணக்காய்ச்சேர்த்து
உறவான வாறடித்துப்
புடத்தைப்போடு உத்தமனே பசுமைநிறமாகுமாமே
விளக்கவுரை :

[ads-post]
1378. ஆமப்பா சொல்லுகிறேன்
நிமிளைவேதை அப்பனே மாணாக்கள் பிழைக்கவென்று
தாமப்பா படிகமென்ற
நிமிளைதன்னை தாரணியில் தேர்ந்தெடுத்து தாம்பரத்தில்
வேமப்பா சூதமது
கூடச்சேர்த்து விருப்பமுடன் தானரைத்து தாம்பூரத்தில்
போமப்பா பழச்சாற்றில்
அரைத்துமைபோல் பொங்கமுடன் சாந்தமதாய்ப் பூசிப்போடே
விளக்கவுரை :
1379. போடவே ரவிதனிலே காயவைத்துப்
பொங்கமுடன் வகல்தனிலே வைத்துமூடி
நீடவே சீலையது
வலுவாய்ச்செய்து நேர்ப்பான புடமதுதான் கோழியாக
காடவே கனலாறியெடுத்துப்பாரு
கனமான செம்பதுவு மூறலற்று
மூடவே தங்கநிறம் போலேயாகும்
முயற்சியாய் வேதையிது சொல்லொண்ணாதே
விளக்கவுரை :
1380. சொல்லவே செம்புதனை யெடுத்துப்பாரு சொக்கமுடன் சொகுசாவி நிறம்போலாகும்
வெல்லவே செம்புவித்தை
யெவர்தான்செய்வார் வேதாந்த தாயினதுவருளினாலே
புள்ளவே குளிகையது பூண்டுகொண்டு
புக்கினேன் தேசாதி வாந்தரங்கள்
செல்லவே யான்சஎன்று
கற்றவித்தை ஜெகத்திலே மானிடர்கள் பிழைக்கத்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments