HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1616 - 1620 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1616 – 1620 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1616 – 1620 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1616. கூட்டியே ரவிதனிலே காயவைத்து
குறிப்புனே யொவ்வொன்றும் பொடியாய்தெள்ளி
தாட்டிகமாய்ச் சர்க்கரைதான்
சமனாய்ச்சேர்த்து சார்புடனே நெய்தேனிற் கொண்டாயானால்
வாட்டமுடன் சேத்துமங்கள்
தொண்ணூற்றாறும் வாகான வாயுவென்ற தெண்பதும்போம்
தேட்டமுடன் பித்தமென்ற
நாற்பதும்போம் தெளியாகும் திரேகமது யிறுகுங்காணே
விளக்கவுரை :
1617. காணவே தேகமது கற்றூணாகும் கருவான நரம்புகளும் முறுக்கிக்காட்டும்
தோணவே சதாகாலமிருக்கலாகும்
துன்பமென்ற சாகரத்தை விட்டொழித்து
மாணவே சதாநிதம் பூசித்தேதான்
மகத்தான கெவனமுதல் கொள்ளலாகும்
வேணவே சமாதியிலே
யிருக்கலாகும் வெகுகோடி காலமட்டும் தேகம்போமோ
விளக்கவுரை :

[ads-post]
1618. போகாது கற்பாந்திரகாலமட்டும்
பொலிவான தேகமது இரும்புபோலாம்
வேகாது சடந்தானும்
தீயில்தானும் விருப்பமுடன் கோடியுகங் காணலாகும்
சாகாது
பூமிதனிலிருந்துகொண்டு சதாகாலம் வாமியைத்தான் பூசிப்பாய்நீ
ஆகாது லோகமென்ற மாய்கைநீக்கி
வப்பனே யெனைப்போல யாகுவீரே
விளக்கவுரை :
1619. ஆகவென்றா லின்னமொரு
கருமானங்கேள் அப்பனே வபினியென்ற வைப்புசொல்வேன்
வாகமுடன் கடுகுடனே கசகசாவும்
பாங்கான கஞ்சாவும் கஞ்சாவும் சரியாய்தூக்கி
வேகமுடன் மராட்டியமா
மொக்குதானும் விசையுடனே கியாழமது செய்துகொண்டு
தோகமுடன் சரக்கதனை
வரைப்பாய்மைபோல் தொவுரதனை தான்போக்க
முறைதான்கேளே
விளக்கவுரை :
1620. கேளேநீ சினமென்ற
வெல்லந்தன்னை கிருபையுடன் பாகுபதஞ் செய்துகொண்டு
கோளேதான் வாராமல் மைந்தாகேளு
கொப்பெனவே சரக்கதனை கிளரிக்கொண்டு
பாளேதான் போகாமல்
மெழுகெடுத்து பான்மைபெற பரணிதனில் பதனம்பண்ணு
தாளேதான் அபினியது
சொல்லப்போமொ தாரணியில் மானிடர்கள் பிழைக்கத்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments