HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1656 - 1660 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1656 – 1660 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1656 – 1660 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1656. வெளியிட்டேன் கோடியுக
வித்தையெல்லாம் வேணபடி யுபதேசஞ்செய்தேன்யானும்
பளியிட்ட யெந்தனுக்கு
சாபமில்லை பாருலகில் சித்தர்முனி கைமறைப்பை
நெளியிட்ட வெள்ளையென்ற
மனிதருக்கு நேர்புடனே காட்டிவிட்டேன் காரணத்தை
துளியிட்ட தேசமெங்கும்
சுற்றிவந்தேன் சூட்சாதி சூட்சமெல்லாம் திறந்திட்டேனே
விளக்கவுரை :
1657. திறந்திட்டேன் வெள்ளையென்ற மனிதர்நீங்கி செப்பவில்லை கருநீலமாந்தருக்கு
குறைந்திட்ட வித்தையெல்லாம்
கூறவில்லை கொட்டினால் மோசமதுவாகும்பாரு
முறைந்திட்ட சாஸ்திரங்கள்
சாபமெய்தும் மோட்சமென்ற வீடில்லை நரகம்போவார்
வரைந்திட்ட வாக்கியங்கள்
பிசகாய்ப்போகும் வாகுடனே போகரிஷி பாடிட்டேனே
விளக்கவுரை :

[ads-post]
1658. பாடினே னின்னமொரு
கருமானங்கேள் பாருலகில் சித்தர்முனி கூறுமார்க்கம்
நீடியதோர் காந்தமது
பலமோவைந்து நேரான வெண்காரம் பலமோவைந்து
தேடியதோர் பூநீரு பலமோவைந்து
தெளிவான கெந்தியது பலமோகால்தான்
கூடியதோர் சரக்கெல்லா
மொன்றாய்ச் சேர்த்து குமுறவே குழிக்கல்லில் போட்டிடாயே
விளக்கவுரை :
1659. போடவே தேனதுவும்
விட்டுமைந்தா பொங்கமுடன் தானரைப்பாய் சாமம்நாலி
நீடவே வச்சிரமாங்
குகையில்வைத்து நேர்புடனே சில்லிட்டுச் சீலைசெய்து
கூடவே ரவிதனிலே காயவைத்து
குணமாக வுலையில்வைத்து வூதிப்பாரு
வாடவே கஅந்தமது சத்தேயாகும்
வளமான சத்தெல்லா மெடுத்துக்கொள்ளே
விளக்கவுரை :
1660. கொள்ளவே காந்தமென்ற
சத்துதன்னை குமுறவே மறுபடியும் மூசைக்கேற்றி
விள்ளவே தானுருக்கி
யெடுத்துப்பாரு வீரான மணியதுவாய் வுருகிநிற்கும்
மெள்ளவே சத்தெடுத்து
கல்வமிட்டு மேன்மைபெற வறுவகை ஜெயநீர்தன்னால்
துள்ளவே தானரைப்பாய்
நாலுசாமம் துறையாக தானெடுத்து ரவியிற்பூசே 
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments