HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1771 - 1775 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1771 – 1775 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1771 – 1775 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1771. விட்டவுட னடியானுந்
தாள்பணிந்து விருப்பமுடன் காலாங்கிதனைநினைத்தேன்
கிட்டநின்ற பாலகனுமே
சிரங்குவித்து கிருபையுடன் திருச்சங்கைக் காணவென்று
திட்டமுடன் முழங்காலு
சமாதியிட்டுத் தீவிரமா யடிதொழுது போற்றிநின்றேன்
சட்டமுடன் சமாதியது
தான்திறந்து சடுக்கெனவே சத்தமது கேட்டிட்டேனே
விளக்கவுரை :
1772. கேட்டவுனடியேனுங்
கிடுகிடுத்து கிருபையுடன் சாஷ்டாங்கஞ் சமர்ப்பித்தேதான்
வாட்டமுட னெந்தனையாரென்று
கேட்க வளமுடனே சிறுபால னுரைக்கலுற்றேன்
பாட்டரென்ற திருச்சங்கு
ராஜன்தன்னை பாரினிலே காண்பதற்கு மனமுவந்து
கோட்டமுடன் சமாதியிடம்
வந்தேனென்று நுட்பமதாய் போகரிஷிவுரைத்திட்டேனே
விளக்கவுரை :

[ads-post]
1773. உரைத்தேனே யெந்தனிட தீரத்தாலே வுத்தமனே காலாங்கி கடாட்சந்தன்னால்
திறப்புடனே காலாங்கி
சீஷனென்றேன் திகழுடனே சீர்பாதங்காணவென்று
மரைப்புடனே குளிகையது
பூண்டுகொண்டு மார்க்கமுடன் சீனபதிவிட்டு நீங்கி
விரைப்புடனே
சமாதியிடங்கண்டுவந்து விருப்பமுடன் வந்தேனே போகர்தானே
விளக்கவுரை :
1774. தானான போகரென்ற போதேயப்பா
தயவுடனே யென்மீதில் பட்சம்வைத்து  
கோனான திருச்சங்கு
ராஜன்தானும் கொற்றவனாரெந்தனுக்கு வுபதேசித்தார்
பானான புத்திமதி மிகவுரைத்து
பாங்குடனே குளிகைகொண்டு போமிடத்தே
வேனான சித்தர்முனி
ரிஷிகள்தாமும் வேணுமென்றே சபித்திடுவார் தப்பிக்கொள்ளே
விளக்கவுரை :
1775. கொள்ளுவது வுந்தனுக்கு
புத்திமார்க்கம் கோளாறுநேராமல் சித்தர்முன்னே
எள்ளளவும் பிசகின்றி
நடந்துகொள்வாய் என்பேரா வுந்தனுக்கு சாபமில்லை
கள்ளமனமுடையதொரு சித்தரப்பா
கண்டாலே வுன்னையுந்தான் சபிப்பார்சித்தர்
உள்ளபடி போலாகவுறவுபேசி
ஒருகடிகைநேரமதில் சபிப்பார்பாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments