HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 3596 - 3600 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 3596 – 3600 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 3596 – 3600 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

3596. வுருக்கியந்த வங்கத்தை
மூவேழுவட்டம் ஒன்றான சாத்திலே வுரைத்தபின்புயெடுத்து
தருக்கிசைந்த வோட்டில்வைத்து
தாளகமுங்கூட்டி தனித்தடுப்பிலேத்தியே
நாயுருவிக்கப்பால்
நெருங்கியதை
வறுத்துவங்கம்நீராக்கிப்பின்பு நீன்குமரிச்சாற்றிலே
யொருசாம மரைத்ததிரிக்கிசைந்த
குகைக்குளிட்டு யெருவில்வைத்து சேவலின் படமாக
நாலிலிடலாமே
விளக்கவுரை :
3597. சேவலின் புடமாக
தினமும்ரெண்டு வட்டந்திரமாக சாற்றிலரைத்திருவதுநாளையிலே
யேவலுறுபுடம் நாற்பத்தொண்ணு
குறையாமலிடவே செந்தூரம் முருக்கம்பூநிறமாம்
ஆவலுறுவெள்ளிதனை
ஒருகளஞ்சியுருகி அதுதெளிவில் பணவிடைசெந்தூரமதை
கொடுக்கநீ வலுமையாக
மாற்றேழரையுங்காணும் நிமலனார் திருவாணை
நிசங்கவரையிதுவே
விளக்கவுரை :

[ads-post]
3598. இதுதனிலுஞ் சுறுக்கான
இன்னமொருவகைகேளு இந்நிலத்தில் ஆதிமருந்து
ஆவரையின்பட்டை
சதிராக கொண்டுவந்து
வுணர்த்தி ஒருபானைதனிலிட்டு பாதாள அஞ்சனத்தில்
தயிலமதைவாங்கி
இறிக்கியதை
யிம்மிவைத்துக்கொண்டு மேலானகோழிமுட்டை வெண்கருவையதிலே
மதுவாக
வுரைத்ததையுமாட்டிரேத் துவசமாகச் செய்தபின்பு அருதாரம்வாங்கே  
விளக்கவுரை :
3599. வாங்கியந்த
அரிதாரக்கட்டிதனில் தயிலம்வாகாகவேயுரைத்து வெய்யிலிலேவைத்தால்
பாங்கான
செந்தூரமாகுமதையெடுத்து பசுமையாயாறவைத்து வெள்ளியொருகளஞ்சி
யேங்கவே யுருக்கியதில்
பணவிடைசெந்தூரம் யேற்கையாய் கொடுக்க மாற்றேழுகுறையாது
நீங்காதே சூதமுனியுரைத்த
வகையெல்லாம் நிசமாகும் கண்டறிந்து தேறிநீபாரே
விளக்கவுரை :
3600. பாரேதான் இன்னமொரு
கருமானங்கேள் பாலகனே யருண்மைந்தா சொல்வேனப்பா
நேரேதான் அனுமாரின்
உற்பவத்தை நேரான மாணாக்கன் அறியவென்று
சீரேதான் வாய்வினிட
தனயனென்றும் சிறப்பான நூலெல்லாம் சொன்னார்கண்டீர்
கூரேதான் கவிவானர்
எல்லாங்கூடி குவலயத்தில் கட்டுறைதான் உரைத்தார்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments