HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 361 - 365 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 361 – 365 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 361 – 365 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

361. கடுகவே ஏறயிலே தீட்டைவிதிக்
கருவைக் கருத்துண்ணி அங்கங்கே கலந்துகாணும்
அடுகவே பிராணயாமம்
அங்கேவைத்து வாகாக விழுங்கையிலே ஒளியேயீறும்
திடுகவே ஒளியோடே சேரு சேர
சிறப்பான திசைநாதம் செவியில் கேட்கும்
அடுகவே பராபரத்தாய் அமிர்தம்
ஈவாள் அகண்டபரி பூரணந்தான் பேசும்பாரே
விளக்கவுரை :
362. பார்க்கவே பூரணந்தான் எளிதோமைந்தா பரிவான தசதீட்சைக் குருவைக்காரு
ஆர்க்கவே அவர்மனது
வந்துதானால் ரண்டிலே சித்தியாம் அடைந்துகூடும்
நோக்கவே இதைவிட்டு
மத்தில்சென்று நினைவுகெடப் பானமுண்டு நிலைத்துவுண்ணார்
தாக்கவே கூசாதே
சற்குருவைத்தேடித்தான் அசையாமல் உடல்பொருளுமாவிநீயே
விளக்கவுரை :

[ads-post]
363. ஆவியவர் கைக்கொண்டால்
கண்டங்கொள்ளும் அடுக்கான வானுவந்தான் பிறவிபோச்சு
பாவியென்ற பேரெல்லாம்
படுதீயாச்சு பராபரத்தில் உன்னறிவு பாய்ந்துபோச்சு 
காவியென்ற சீலையென்ற
வேஷமென்னக் கருவுண்ணி சமுசாரத்தின் உள்ளேநிற்பார்
கோவியென்ற கோபம்வந்து
செபித்தாரானால் கோட்டிவிழுந்தாப்போல கொள்குந்தானே
விளக்கவுரை :
364. தானான பிராணயாமம்
பண்ணும்போது தயங்கியே அபினாபரத்தில் பானந்தாக்கில்
ஊனான உகாரத்தில் உந்தியிலே
சேர்வாய் முகப்பான மருந்துகொண்டால் சருமநோய்தான்
ஆனான லட்சியத்தை அதிலேவைத்து
அடியற்றா மூர்ச்சையுள்ளே வாங்கிநின்றால்
பானான வபானமது
பிரிந்துபோகும் பண்பான பானத்தை பாங்காயுண்ணே
விளக்கவுரை :
365. உண்ணவே இவ்வளவும்
யோகமார்க்கம் உறுதியாய் பார்த்தபடி உண்மைசொன்னேன்
கண்ணவே காலாங்கி ஐயர்சொல்லக்
கடாட்சித்த பாட்டரென்ற மூலநாயர்
திண்ணவே அவர்பதத்தைச்
சிரசில்வைத்துச் சிறந்தமனோன்மணித்தாயார்
சொல்லக்கேட்டு
விண்ணவே பதஞ்சலியர்
வியாக்கிரமர்தாமும் விதியுள்ளாரென்று போதித்தாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments