HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4646 - 4650 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4646 – 4650 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4646 – 4650 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4646. கண்டாரே காலாங்கி
நாதர்தம்மின் கனமான போகரிஷிநாதர்தானும்  
அண்டர்முடி தேவாதி
தேவரெல்லாம் வண்பாக தேவேந்திரன் பக்கல்தன்னில்
கொண்டல்முடி அச்சுதனார்
கோபாலன்தன் குருவான பீடமது தன்னைக்கண்டார்
சண்டமாருதம்போலே
இந்திரன்பக்கல் சாங்கமுடன் போகரிஷி கண்டார்தானே
விளக்கவுரை :
4647. கானான போகரிஷி முனிவர்தானும்
தண்மையுள்ள இந்திரனார் தன்னைநோக்கி
கோனான யென்தேவா பகவானேகேள்
கொற்றவனார் ரிஷியாரின் சாபந்தன்னை
மானான காலாங்கி நாதரல்லோ
மகத்தான நாலுயுகங் கண்டசித்து
தேனான
மனோன்மணியாளறிந்தசித்து தேசமெல்லாங் கரைகண்டசித்துமாமே
விளக்கவுரை :

[ads-post]
4648. சித்தான தேவேந்திர
பகவானேகேள் சிறப்பான லோகமதில் கீர்த்திபெற்ற
முத்தான காலாங்கிநாதர்தாமும்
முடிவணங்கியடிவணங்கி சமாதிதன்னில்
சுத்தமுடன் தேவேந்திரா
யுந்தமக்கு சுடரொளியே ஜெகஜோதி சொரூபநந்தா
சித்துமது மனதுவந்து
தேர்வேந்தேகேள் சீரான ரிஷிசாபம் நீக்கென்றாரே
விளக்கவுரை :
4649. என்றாரே மயில்ரூபந்தன்னைமாற்றி எழிலான பகதேவர் அடியார்தம்மை
முன்னான யுகந்தனிலே
இருந்தாப்போல மூதுலகில் சாபமதைத் தீர்த்துமல்லோ
பின்னான
மயில்ரூபந்தன்னைமாற்றி பேறானரிஷிபோல வடிவமாக்கி
மன்னவனே வையகத்தில்
பிறவிமாற்றம் மகதேவா செய்வதுவுன் பாரமாமே
விளக்கவுரை :
4650. பாரமா மென்றல்லோ போகர்தாமும்
பட்சமுடன் பலகாலுந் தாள்பணிந்து
தீரமுடன் தேவேந்திரன்
தன்னைநோக்கி தீர்க்கமுடன் பலநாலுந் தெண்டனிட்டார்
சூரர்முதல் தேவர்கணபூதத்தோடு
துப்புரவாய் தேவேந்திரபகவான்தானும்
வீரமுடன் போகர்முகந்
தன்னைநோக்கி விருப்பமுடன் தேவேந்திர பகவான்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments