HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4726 - 4730 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4726 – 4730 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4726 – 4730 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4726. பாரேதான் காலாங்கி நாதசீஷா
பட்சமுள்ள கண்மணியே பகரக்கேளும்
நேரேதான் வடக்குமுகம்
மலைதானுண்டு நெடிதான வடகோடி கானகந்தான்
சீரேதான் சித்தர்முனி
தவமிருந்த சிறப்பான வுத்தமுண்டு சுனைதானுண்டு
ஊரேதான் கண்டவர்கள்
யாருமில்லை ஓகோகோ நாதாக்கள் கண்டார்தானே
விளக்கவுரை :
4727. தானேதான் மலைநாடு
சுனையோரத்தில் தண்மையுள்ள சித்துவர்க்கம் கோடாகோடி
மானேதான் ரேணுகையின்
சமாதியுண்டு மகத்தான சமாதியிடம் சென்றாயானால்
தேனேதான் வண்டுரையும்
கதண்டுக்காடு தெளிவான ரேணுகையின் சமாதிக்கோட்டை
கோனேதான் குருக்கள்முனி யாசீர்மங்கள்
கூறான சமாதியிடங் காவல்தாமே
விளக்கவுரை :

[ads-post]
4728. காவலாஞ் சமாதியிடம்
சென்றாயானால் காரிகையாள் ரேணுகையின் ஆசீர்மத்தில்
போவதற்கு வழிதடங்கள்
காணமாட்டார் புகழான ரேணுகையின் கோட்டைதன்னில்
ஆவலுடன் சென்றாலும்
சமாதிகாண்போர் வப்பனே விட்டகுறை யிருந்தால் வாய்க்கும்
ஏவலுடன் குருக்கள்மார்
ரிஷிகள்கூட்டம் எழிலாகத் தாமிருப்பார் சுத்திகாணே
விளக்கவுரை :
4729. காணவென்றால் ரேணுகையைப்
பார்ப்பதற்கு கடைகோடி கானகத்தில் சென்றாலுந்தான்
பூணவே குளிகைகொண்டு
சென்றபோதுப் புகழான ரேணுகையைக் காணமாட்டீர்
தோணவே ரேணுகையாள்
சமாதிபக்கம் துப்புரவாய் பாலகனே நின்றாயானால்
நீணவே சமாதியிட
தடமுந்தோன்றும் நிலையான ரேணுகையின் கோட்டைதானே
விளக்கவுரை :
4730. தானான கோட்டையது சமாதிபக்கம்
தகமையுடன் நின்றாலே தடந்தான்காணும்
கோனான குருக்கள்மார்
ரிஷிகள்கூட்டம் கொம்மனைமார் சமாதியிடம் பக்கம்நிற்பார்
தேனான சித்தர்முனி
நாதர்தம்மை தேற்றமுடன் வாய்திறந்து கேட்பாயானால்
மானான சமாதியிடம்
வழியுஞ்சொல்லி மகத்தான ரேணுகையின் விதிசொல்வாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments