HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4821 - 4825 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4821 – 4825 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4821 – 4825 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4821. பாரேதான் இதிகாச
வித்தையெல்லாம் பண்புடனே கூடிருந்து கண்டாராசய்ந்து
நேரேதான்
சின்மயத்திலிருந்துகொண்டு நீதியுடன் மலைமீதில் சென்றுயானும்
தீரேதான் தவநிலைக்கு
யாளுமாகி தீர்க்கமுடன் யாகமது செய்யும்போது
ஆரேதான் ஒருவரப்பா
ரிஷியார்போலே வப்பனே முன்வந்துநின்றிட்டாரே
விளக்கவுரை :
4822. நின்றுமே எந்தனுக்கு
காயகற்பம் நீடாழி யுலகுபதி இருக்கவென்று
குன்றின்மேல்
ஆகாயதேவரிஷிதாமும் கொற்றவனே கண்முன்னேவந்துநின்று
அன்றுரித்த மான்தோலும்
புலித்தோலுமாக வப்பனே கண்ணிற்குத் தோற்றங்கொண்டு
இன்றுமுதல் எந்தனுக்கு காயகற்பம்
எழிலாக வுண்ணவென வரந்தந்தாரே
விளக்கவுரை :

[ads-post]
4823. தந்தாரே
வரமதுவுந்தான்கொடுத்து தகமையுடன் காயாதிகற்பந்தந்து
சிந்தனையுமொன்றாக்கி
எந்தனுக்கு சீர்பெறவே நாலுயுகமிருக்கவென்று
சொந்தமுடன் எந்தனுக்கு
ஞானமோதி சுடரொளியாந் தோற்றமதை முன்னுண்டாக்கி
விந்தைகளு மிகக்கூறி
யெந்தனுக்கு விண்ணுலகில் இருக்கவென்று மதிசொன்னாரே
விளக்கவுரை :
4824. சொன்னாரே அன்றுமுதல்
இன்றுமட்டும் துப்புரவாய் நெடுங்காலமிருந்தேன்யானும்
மன்னவனார் இருபத்தோர்
முறைகள் கண்டேன் மகத்தான திருச்சங்கு யானுங்கண்டேன்
நன்னயமாய் தசரதரை
யானுங்கண்டேன் நளராஜ பதியைத் தானுங்கண்டேன்
வின்னமிலா சூர்ப்பனகை
தன்னைக்கண்டேன் வீறான கைகேசி கண்டேன்தானே
விளக்கவுரை :
4825. தானான சமர்க்களத்தில் இராவணன்தன் தண்மையுள்ள மண்டோதரி தன்னைக்கண்டேன்
கோனான ஸ்ரீராமர்
தன்னைக்கண்டேன் கொம்பனையாள் பிராட்டியரை யானுங்கண்டேன்
மானான தென்னிலங்கை
பதியிலப்பா மகத்தான வாக்கருட கூட்டங்கண்டேன்
பானான ராட்சதாள்
தன்னைக்கண்டேன் பாங்கான ஆஞ்சனேயர் கூட்டந்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments