HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4926 - 4930 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4926 – 4930 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4926 – 4930 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4926. நடந்தேனே இமயகிரி தன்னிலப்பா
நலமான மேருகிரி சாரலோரம்
கடந்தேனே பதினாறாம்
வரையில்தானும் கருவான சுனையுண்டு தடாகமுண்டு
அடந்ததொரு சுனையருகே
சுரங்கமுண்டு அதன்புறத்தே யிருளடைந்த சோலையுண்டு
தொடர்ந்ததொரு சித்துமுனி
நாதர்கூட்டம் தோறாத சீஷவர்க்க மனேகமுண்டே
விளக்கவுரை :
4927. உண்டான மலைதனிலே கோடிசேனை
உலகமதில் மெத்தவுண்டு சொல்லொண்ணாது
அண்டர்முனி ராட்சதர்கள்
இருக்கும்நாடு அடைவான நாளதனில் அதிசயத்தை
கண்டதொரு காரியங்கள்
என்னவென்றால் கடிதான வதிசயத்தை என்னசொல்வேன்
தொண்டனைப்போல் அடியேனும்
குளிகைபூண்டு துப்புரவாய் வெகுகால மிருந்திட்டேனே
விளக்கவுரை :

[ads-post]
4928. இருந்தேனே கானகத்தின்
வழியில்தானும் எழிலான குகையோரம் தன்னில்நின்றேன்
குருந்தமரந் தன்னருகே
சித்துதாமும் கொப்பெனவே சீஷவர்க்கம் தன்னிற்சேர்ந்து
பொருந்தவே நெடுங்காலந்
தவமிருந்து பொங்கமுடன் சுனையோரம் சாரல்தன்னில்
விருந்தமுர்தமான
தொருபசளைதன்னை விருப்பமுடன் சித்துமுனியும் பார்த்தாரே
விளக்கவுரை :
4929. தானான கறுப்பசளை யுண்டபோது
தகமையுள்ள சித்துமுனி ரிஷியார்தாமும்
கோனான குருசொன்ன மூலிதன்னை
கூறான சித்துமுனி நாதர்தாமும்
பானான மூலிதன்னை அந்திசந்தி
பாகமுடன் தானிருந்து வருங்காலத்தில்
மானான மூலியது முனிவருக்கு
மகத்தான இலையதுவும் பதினாரெட்டே
விளக்கவுரை :
4930. எட்டான மூலிதனை சித்துதாமும்
எழிலான அந்திசந்தி காயகற்பம்
திட்டமுடன் சதாகாலங்
கொள்ளும்போது திரமான மூலியது ஒருநாள்தன்னில்
பட்டமரந் தனிலல்லோ
தழைகள்மென்று பாங்குடனே தானிருக்கும் வண்மைதன்னை
தொட்டவர்கள் யாரென்று
சித்துதாமும் தோற்றமுடன் வுள்ளமதில் எண்ணிட்டாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments