HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5066 - 5070 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5066 – 5070 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5066 – 5070 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5066. பதிந்துமே முடிச்சியின்மேல்
மனலைக்கொட்டி பாங்குபெற தீயதனைமேலேமூட்டி
அதிந்துமே யோர்சாம
மெரித்தபோது வப்பனே யாற்றுநீர் கசிந்துமேதான்
துதிந்துமே யரிசியது யூறலாகி
துய்யாணின்னிறம்போலே சாதமாச்சு
முதிந்துமே போகாமல்
பதத்தெடுத்து முத்தமனே எந்தனுக்கு தந்தார்தானே
விளக்கவுரை :
5067. தானான காலாங்கி நாதர்தாமும்
தண்மையுடன் எந்தமக்குக் கொடுத்தஜாலம்
கோனான குருகொடுத்த ஜாலமப்பா
கொற்றவனே யுந்தனுக்கு யானும்தந்தேன்
பானான பராபரியாள்
கடாட்சத்தாலே பாலித்தேன் யுந்தமக்கு இந்தப்போக்கு
தேனான ஜாலமது இந்திரஜாலம்
தேற்றமுடன் யுலகுதனில் செய்வாய்பாரே
விளக்கவுரை :

[ads-post]

5068. பாரப்பா வரிசியென்ற சாதமப்பா
பண்புடனே கண்டவர்கள் பிரமிப்பார்கள்
நேரப்பா பாண்டமில்லா
வித்தையப்பா நெடிதான தந்திரமாஞ் ஜாலவித்தை
ஆரப்பா செய்வார்கள்
இந்தப்போக்கு வப்பனே யாமுமக்குச் சொன்னநீதி
சீரப்பா வுலகுதனில்
சித்தனைப்போல் சிறப்புடனே தாமிருந்து யாடுவாயே
விளக்கவுரை :
5069. ஆடையிலே வையகத்து
மாண்பரெல்லாம் அப்பனே இந்திரமாஞ்ஜாலமென்பார்
கூடையிலே வெகுபேர்கள்
மாண்பர்தானும் குறிப்புடனே இச்சாலம் செய்துபார்ப்பார்
தேடையிலே பாண்டமது
ஜலமுமில்லா தேசத்தில் வித்தையிது சொகுசுமெத்த
நீடையிலே சபைகூடி
செய்துபார்த்து நீதியுடன் உந்தனையும் வணங்குவாரே  
விளக்கவுரை :
5070. வணங்கியே ஏவல்களும்
மிகவுஞ்செய்து வஞ்சலிகள்மிகச்செய்து வன்பாயப்பா
இணங்கியே சோடசோபசாரஞ்செய்து
யென்குருவே யென்சாமி யென்பார்பாரு
மணங்கமழுந் தாமரையை
யடிபணிந்து வையத்திலெப்போதும் சதாநித்தம்தான்
பணங்காசு மிகத்தந்து
பலவாயீந்து பாலகனே எப்போதும் போற்றுவாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments