HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5081 - 5085 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5081 – 5085 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5081 – 5085 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5081. ஆமப்பா வெளிநின்ற
மாந்தர்க்கெல்லாம் அப்பனே தோற்றுமடா குரங்குரூபம்
போமப்பா வுன்னின்று
பேசும்போது பேரான ரூபமது குரங்குபோலாம் 
நாமப்பா வெளிநின்று
பேசினாக்கால் நாயகனே நீயுமொரு மனிதனப்பா
தாமப்பா இந்தபடி ஜாலஞ்செய்து
தாரணியில் பிழைப்பதுவும் அதிதமாமே
விளக்கவுரை :
5082. அதிதமென்ற வித்தையிது
யார்தான்காண்பர் அன்பான புத்தியுள்ளான் அறிவான்பாரு
துதிதமுள்ள தருவினது
ஜாலப்போக்கு தூய்மையுடன் காணுபவன் சித்தனப்பா
பதிதனிலே இந்தவித்தை
செய்துமல்லோ பாலகனே கீர்த்தியது கொண்டுமேதான்
மதிமயங்க எல்லவருங்
கண்டுயேங்க மானிலத்தில் எப்போதும் துதிகொள்வாயே
விளக்கவுரை :

[ads-post]
5083. கொள்ளவே யின்னமொரு
மார்க்கம்பாரு கூறுவேன் எனதையர் காலாங்கிநாதர்
உள்ளபடி கண்டதொரு வதிசயங்கள்
உத்தமனே யானுமது வெகுவாய்ச்சொல்வேன்
வள்ளலுறை தென்னிலங்கைப்
பதியிலப்பா தளமான வதிசயங்கள் கூறுவேன்யான்
தெள்ளுமையாள் துவாரத்தில்
இலங்கையப்பா தெளிவான பதிமகிமை கூறுவேனே
விளக்கவுரை :
5084. கூறுவேன் இலங்கைபதி
மார்க்கந்தன்னை கொற்றவனே புலிப்பாணி மைந்தாகேளு
தேறுபுகழ்
நவகண்டந்தன்னிலப்பா தேர்வேந்தர் ராஜர்களின் கோட்டைதன்னில்
வீறுபுகழ் இராவணனார்
கோட்டையப்பா விண்ணாழி கோட்டையது விளம்பப்போமோ
மாறுபடாக் கோட்டையது
வளப்பஞ்சொல்வேன் மகத்தான வதிசயங்கள் மெத்தவுண்டே
விளக்கவுரை :
5085. உண்டான தேசமது இலங்கையப்பா
வுத்தமனே வெகுகோடி காலமுன்னே
கண்டேனே குளிகையது
பூண்டுகொண்டு கண்கொள்ளாக் கோட்டையது யானுங்
கண்டேன்
அண்டர்முனி ராட்சதர்கள்
இருக்குங்கோட்டை அரசனது ராவணனார்கோட்டையப்பா
சண்டமாருதம்போலக்
கோட்டையுண்டு சாங்கமுடன் கற்கோட்டைக் கூறொண்ணாதே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments