HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5086 - 5090 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5086 – 5090 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5086 – 5090 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5086. ஒண்ணாது தேசமது நூறுகாதம்
உத்தமனே காடுவன பூமியெல்லாம்
அண்ணாந்து பார்க்கவொண்ணா
கோட்டையப்பா வழகான கோபுரங்கள் மாபுரங்கள்
சுண்னாம்பு பூமியது
வையகந்தான் சுற்றிலும் சாகரமே வலைகள்மோதும்
தண்மையுடன் யெந்நாளும்
வாடைக்காற்று சாங்கமுடன் இருப்பதுவுங் கண்டிட்டேனே
விளக்கவுரை :
5087. கண்டதொரு தேசமது யிலங்கைநாடு
காசினியில் அப்பதிபோலெங்குமில்லை
உண்டான வதிசயங்கள்
மெத்தவுண்டு வுலகத்தில் எங்கேனும் கண்டதுண்டோ
திண்டான கோட்டைக்கு
யகழிமத்தி திறளான சாளரங்க வாசலுண்டு
தண்டான வகழிக்குங்
கடலுக்குந்தான் தாக்கான வழிதட்டு முண்டேபாரே
விளக்கவுரை :

[ads-post]
5088. பாரப்பா ஜலமதுவும் போக்குவுண்டு பாங்கான கோட்டைக்கும் அகழிக்குந்தான்
நேரப்பா சாகரமும்
வழியுமுண்டு நிலையான இலங்கைபதி கோட்டைதன்னில்
ஆரப்பா வெகுகால
மிப்படியேயுண்டு வப்பனே வோடமது போவதுண்டு 
கூரப்பா நெடுங்கால
மிப்படியேயப்பா கூரான கோட்டையது இருக்குந்தானே
விளக்கவுரை :
5089. தானான கோட்டையது
வாசல்தன்னில் தார்வேந்தன் மன்னனது செங்கோல்தன்னில்
தேனான மனோன்மணியாள் ரூபம்போல
தேர்வேந்தர் சபைமுன்னே தோற்றலாச்சு
மானான வசரீரி வாக்குதானும்
மன்னவர்முன் தன்செவிக்குக் கேட்கலாச்சு
கோனான வேந்தனுமே
திடுக்கிட்டேங்கி கொற்றவனும் பயந்தல்லோ விழுந்திட்டாரே
விளக்கவுரை :
5090. இட்டாரே தேர்வேந்தர்
ராசர்தாமும் எழிலான கோட்டைக்குள் மத்தியானம்
பட்டதொரு ராசர்முன்
மாண்பரெல்லாம் பயந்தொடுங்கி கண்கலக்கமிட்டபோது
அட்டதிசை தான்கலங்கி
சாகரந்தான் வடியோடே யலையதும் மேலேபொங்கி
சட்டமுடன் கோட்டைக்குள்
சாகரந்தான் சடுதியிலே பொங்கியது முழுகலாச்சே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments