HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5101 - 5105 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5101 – 5105 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5101 – 5105 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5101. தானான இன்னமொரு ஜாலமார்க்கம்
தண்மையுடன் கூறுகிறேன் மைந்தாகேளு
தேனான மனோன்மணியாள்
கிருபையாலே ஜெகதலத்தில் அனேகவித்தை செப்பக்கேளு
கோனான காலாங்கி நாதர்தம்மால்
குவலயத்தில் கோடியுக மிருந்துமேதான்
பானான வதிசயங்கள்
மிகவுஞ்சொல்லி பாலித்தார் எந்தனுக்குக் கோடியாமே
விளக்கவுரை :
5102. கோடியாம் பசுமாடு
இருக்குங்கூட்டம் கொற்றவனே நீசென்றுமைந்தாபாரு
தேடியே கரும்புலியின்
கொழுப்புதன்னை தீவிரமாம் கொண்டல்லோ காற்றுவாடை
நாடியே ஓரிடமாய்
வைத்துக்கொண்டு நலம்பெறவே கோனானின்னருகிற்சென்று
பாடியே பால்கறக்கச்
சொல்வாயப்பா பாலகனே மாடெல்லாமோடும்பாரே
விளக்கவுரை :

[ads-post]
5103. ஓடியே பால்கறக்க மாட்டாதப்பா
வுத்தமனே சமுசாரி யலைவான்பாரு
தேடியே மாடெல்லாம்
பிடிப்பான்பாரு தேசத்தில் மாடெல்லாமோட்டங்காட்டி
நீடியே யவனிடத்தில்
வாராதப்பா நிட்சய காலாங்கி ஜாலமப்பா
கூடியே ஜனங்களெல்லாங்
கூட்டமிட்டு கொப்பெனவே மயங்கியல்லோ தியங்குவாரே
விளக்கவுரை :
5104. தியங்கியே
ஏமாந்துநிற்கும்போது தீரமுடன் கோனாரின்பக்கல்வந்து
மயங்கியதோர் கோனானைக்
கண்டல்லோதான் மார்க்கமுடன் தானழைத்து மன்னாகேளு
நயம்படவே யவன்தனக்கு
குறிகள்சொல்ல நன்மையுடன் செம்பொன்னைக் கேட்பாயப்பா
ஜெயம்பெறவே காளியிடசாபத்தாலே
ஜெகதலத்தில் மாடெல்லா மோடலாச்சே
விளக்கவுரை :
5105. ஆச்சப்பா சாபத்தை
நிவரத்திசெய்து வப்பனே பூசைசெய்யவேண்டும்
மூச்சடங்கிப்போனதொரு
மாடெல்லாந்தான் உத்தமனே மந்தைவந்து சேரும்பாரு
பாய்ச்சலுடன் வேங்கையுட
கொழுப்புதன்னை பாலகனே நீமறைவாய் வைத்துவிட்டு
கூச்சலுடன் பாஷையாய்
மந்தைமாட்டை கொப்பெனவே தானழைக்க வருகும்பாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments