HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5351 - 5355 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5351 – 5355 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5351 – 5355 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5351. பாரேதான் செம்பதுவும்
என்னசொல்வேன் பாரினிலே நாதாக்கள் செய்யும்வேதை
சீரேதான் செம்பதுவும்
எடுத்துமைந்தா செயம்பெற்றே யோடதனில் ஊதிப்போடு
நேரேதான் செம்பதுவும் ஊறலேகி
நெடிதான கலசகுண்டலத்துக்காதி ஆரோதான்
செய்வார்கள் இந்தபாகம்
வவ்பனே விதியாளிக் கமையும்பாரே
விளக்கவுரை :
5352. விதியான செம்பதனை
யெடுத்துமைந்தா விருப்பமுடன் தான்போகும் வழியைக்கேளு
மதியான வெள்ளிதனில்
நாலுக்கொன்று மகத்தான செம்பதனைக் கொடுத்தாயானால்
பதியான மதியதும் பழுப்பேயேறி
பாங்கான செம்பதுவும் தங்கச்செம்பாய்
துதியான சிவத்துக்கு
உறுதிசெம்பொன் துறையான வழிபாடு முறைபாடாமே
விளக்கவுரை :

[ads-post]
5353. பாடான செம்பதுவும்
என்னசொல்வேன் பாரினிலே நாதாக்கள் செய்யும்வேதை
தாடாண்மை கொண்டதொரு
சித்துவேதை தகமையுள்ள புத்திமான் அறிவான்பாரு
நாடான வையகத்தில்
கருமிமாண்பர் நன்மையுடன் கதைபேசி முறைகள்பேசி
சாடான நயம்பேசி காமும்பேசி
சார்பான முறைதனையே கேட்பார்பாரே
விளக்கவுரை :
5354. கேட்டாலும் முறைதனையே
கொடுக்கவேண்டாம் கெடியான மாண்பருக்குக்
கொடுப்பாயானால்
வாட்டமுடன் தலைதான்
தெரித்துப்போகும் வளமுடனே நாதாக்கள் சொன்னவாக்கு
தேட்டமுடன் நண்பருக்குக்
கொடுப்பாயானால் தெளிவான சியோகம் கிட்டும்பாரு
ஆட்டமது செம்பினது ஆட்டமல்லோ
வவனிதனில் யார்காண்பார் வதிதம்பாரே
விளக்கவுரை :
5355. பாரேதான் இன்னமொரு
மார்க்கங்கேளு பான்மையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு
நேரேதான் நாகமொரு
சேர்தானாகும் நிலையான இலுப்பைநெய் தன்னிலப்பா
சீரேதான்
நாகமதையுருக்கிக்கொண்டு சிறப்புடனே சாரமதை கிராசமீவாய்  
தீரேதான் கிராசமது
கொடுத்துமல்லோ திறமுடனே இலுப்பைநெய்யில் வுருக்கிச்சாயே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments