HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5381 - 5385 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5381 – 5385 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5381 – 5385 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5381. ஆச்சப்பா பூநீறுறங்கினாலே வப்பனே பச்சையென்ற மணியுமாச்சு
மூச்சடங்கி யிருந்ததொரு
கருவைத்தானும் முக்கியமாய் உடைத்துப்பார்
யென்னசொல்வேன்
பாச்சலுடன் பச்சையென்ற
மணிதானங்கே பாங்குடனே சதகோடி யென்னலாகும்
மாச்சலுடன் சீனபதி
பெண்களுக்கு மார்க்கமுடன் ஓதிவைத்தேன் உண்மைபாரே
விளக்கவுரை :
5382. உண்மையாய் யின்னமொரு
மார்க்கம்பாரு வுத்தமனே புலிப்பாணி மைந்தாபாரு
வண்மையாஞ் சீனபதி
பெண்களுக்கு வளமான நீலமணி செய்வேனப்பா
தண்மையாம் பூநீராம்
பலகைதன்னில் தகமையுள்ள நீலத்தினுட்படுத்து
பண்மைபெற மூசையிட்டு
வுருக்கியல்லோ பட்சமுடன் நீலமணி செய்தேன்தானே
விளக்கவுரை :

[ads-post]
5383. செய்யவென்றால் சிறுகம்பி
மயிர்பாலந்தன்னில் சிறப்புடனே ஸ்தம்பமது நிறுத்தியல்லோ
பையவே கருக்கட்டி
துவாரமிட்டு பாங்குபெற மூசையிட்டு வுருக்கியல்லோ
வெய்யவே மூசையது
வுருக்கியேதான் மேன்மையுடன் கருவதனில் பாயும்போது
துய்யதொரு நீலமணி
யென்னசொல்வேன் துப்புரவாய் சதகோடி யென்னலாமோ
விளக்கவுரை :
5384. என்னவே காலாங்கி நாதர்வாக்கு
யெழிலான வேதைமுகம் பொய்யாதப்பா
பன்னவே சீனபதி பெண்களுக்கு
பாலித்த வேதையது கோடாகோடி
மின்னவே பவளமணி சொல்வேன்பாரு
வித்தகனே சித்தர்முனி சொன்னதில்லை
நன்னவே நாதாக்கள்
தாள்பணிந்து நவிலுகிறேன் பவளமணி நவிலத்தானே
விளக்கவுரை :
5385. நவிலவே மண்பவளமென்னசொல்வேன்
நாதாக்கள் சித்துமுனி வந்ததில்லை
சவிலமுள்ள பூநீரு பலகைதன்னை
சட்டமுடன் ஈயமென்ற செந்தூரத்தை
குவிலவே மூசையிட்டுத்
தானுருக்கி கொற்றவனே மயிர்பாலந் தூணித்து
பவிலவே கருக்கட்டி
வாய்தான்விட்டு பக்குவமாய் யுருக்கியதை யெடுத்துவாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments