HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5436 - 5440 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5436 – 5440 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5436 – 5440 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5436. அரைத்துமே பயிரளவாய்க்
குளிகைசெய்து வன்பான சிமிழ்தனிலே பதனம்பண்ணு
திரைகடலில் உள்ளதொரு
மாண்பர்தம்மில் திறளான கர்மிகளும் மர்மிகளுமுண்டு
வரையான கர்மிகட்கு
சொல்வேன்பாரு மகத்தான குளிகைதனை மீவாயப்பா
கரையான குளிகைதனை
மீய்ந்தபோது கனமான ரோகமது பலிக்குந்தானே   
விளக்கவுரை :
5437. தானான பரியாசஞ் செய்தபோக்கு
தாக்கான தருமத்தைக் கெடுத்தபோக்கு
மானான சமுசார வாழ்க்கைதன்னை
மார்க்கமுடன் தான்கெடுத்த பாவிகட்கும்
கோனான குருதனையே
துரோகஞ்செய்து குடிகெடுத்த சண்டாளர்துரோகிகட்கு
தேனான ஸ்திரிசங்கஞ்
செய்துமல்லோ தெருதனிலே வளையவிட்ட பாலிக்காமே
விளக்கவுரை :

[ads-post]
5438. பாவியாஞ் சிசுவதைகள்
செய்தபோக்கு பாருலகில் கருதனையே யழித்தபேர்க்கு
ஆவியுடன் காயமதை யழிக்கவல்லோ
வழும்புமிக செய்ததொரு பாவியோர்க்கு
நாவிதனைப் பால்தனிலே
கலந்தபேர்க்கும் நட்பான நேசமதைக் கெடுத்தபேர்க்கும்
காவிகஷாயமது பூண்டஞானி
கருவான சித்தர்தமைக் கெடுத்தோர்க்கே
விளக்கவுரை :
5439. கெடுத்துமே நயம்பேசி
கரங்கள்பேசி கெடுவழிக்கு யேதுவகைத் துரைகள்பேசி
அடுத்ததொரு கதாபாத்திரம்
உள்ளபேரை அகடான வார்த்தைகளும் மிகவுங்கூறி
கொடுத்ததொரு பொருள்தனையே
மோசஞ்செய்து கொற்றவர்க்குத் துரோகமது
செய்தபேர்க்கும்
தடுக்காமல் கொடுக்குமொரு
புண்ணியோரை தவிர்க்கவே செய்வதற்கு மொழிதான்கேளே
விளக்கவுரை :
5440. கேளேதான் நம்பியே துரோகஞ்செய்த
நெடுங்கால சண்டாளமாண்பருக்கும்
நாளேதான் போகாமல் கூலிவாங்கி
நலம்பெறவே தொழில்தனையே கெடுத்தபேர்க்கும்
பாலேதான் பார்த்தவுடன்
நயங்கள்பேசி பண்பாகக் காணாட்டல் முறைகள்பேசி
ஆளேதான் கண்டவுடன் சூதுபேசி
அவனிதனி லிருந்ததொரு மாந்தருக்கே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments