HomeUncategorizedThirukural 1011 of 1330 - திருக்குறள் 1011 of 1330

Thirukural 1011 of 1330 – திருக்குறள் 1011 of 1330

Thirukural
1011 of 1330 –
திருக்குறள் 1011 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : நாணுடைமை.
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
Translation:
To shrink abashed from evil deed is
‘generous shame’;
Other is that of bright-browed one of
virtuous fame.
Explanation:
True modesty is the fear of (evil) deeds;
all other modesty is (simply) the bashfulness of virtuous maids.
கலைஞர் உரை:
ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

[ads-post]
மு. உரை:
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.
சாலமன் பாப்பையா உரை:
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.
மணக்குடவர் உரை:
தாம் செய்யும் வினையினாலே நாணுதல் நாணம். அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோ டொக்கும். மேற்கூறிய நாணம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:
நாணுக் கருமத்தால் நாணுதல்நன்மக்கள் நாணாவது இழந்த கருமங் காரணமாக நாணுதல்; பிற திரு நுதல் நல்லவர் நாணுஅஃதன்றி மனமொழிமெய்களது ஒடுக்கத்தான் வருவனவோ வெனின், அவை அவரளவல்ல, அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண்கள். (‘பிற குலமகளிர் நாண்என்றதனான், ஏனையதுநன்மக்கள் நாண்என்பதும், ‘நாணுதல்என்றதனால் கருமத்தது இழிவும் பெற்றாம். ‘திருநுதல் நல்லவர்என்பது புகழ்ச்சிக் குறிப்பு. ஏதுப்பன்மை பற்றிப்பிறஎன்றார். இனி, ‘அற்றம் மறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோடு ஒக்கும்என்று உரைப்பாரும் உளர், அவர்க்கு நாண் கேடு பயக்கும் என விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்பட்டமையானும், அஃது உரையன்மை அறிக. இதனான் நாணினது இலக்கணம் கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments