HomeUncategorizedThirukural 1034 of 1330 - திருக்குறள் 1034 of 1330

Thirukural 1034 of 1330 – திருக்குறள் 1034 of 1330

Thirukural
1034 of 1330 –
திருக்குறள் 1034 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : உழவு.
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
Translation:
O’er many a land they ‘ll see their monarch
reign,
Whose fields are shaded by the waving
grain.
Explanation:
The Patriotic farmers desire to bring all
other states under the control of their own king.
கலைஞர் உரை:
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.

[ads-post]
மு. உரை:
நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.
மணக்குடவர் உரை:
பல அரசர் குடைநிழலும் தம் அரசர் குடைநிழற்கீழே வரக்காண்பர், குடையில்லா நிழலை யுடையவர். குடையில்லா நிழலாவது பைங்கூழ் நிழல். இது தாம் வாழ்தலே அன்றித் தம் அரசனையும் வாழ்விப்பர் என்றது. (அலகுடைய நீழல்கதிர்களையுடைய நெற்பயிரின்நிழல்)
பரிமேலழகர் உரை:
அலகு உடை நீழலவர்உழுதல் தொழிலான் நெல்லினை உடையராய தண்ணளி உடையோர்; பலகுடை நீழலும் தம் குடைக்கீழ் காண்பர்பலவேந்தர் குடை நிழலதாய மண்முழுதினையும் தம் வேந்தர் குடைக்கீழே காண்பர் (அலகுகதிர், `ஃது ஈண்டு ஆகுபெயராய் நெல்மேலதாயிற்று. ‘உடையஎன்பது குறைந்து நின்றது. நீழல் போறலின், நீழல் எனப்பட்டது. ‘நீழலவர்என்றது இரப்போர்க்கெல்லாம் ஈதல் நோக்கி ஒற்றுமை பற்றித்தங்குடைஎன்றார். ‘குடைநீழல்என்பதூஉம் ஆகுபெயர். ‘ஊன்று சால்மருங்கி்ன் ஈன்றதன் பயனே‘ (புறநா.35)என்றதனால், தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண்முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம், ‘இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்‘ (சிலப்.நாடுகாண்.149)என்றார் பிறரும்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments