HomeUncategorizedThirukural 1056 of 1330 - திருக்குறள் 1056 of 1330

Thirukural 1056 of 1330 – திருக்குறள் 1056 of 1330

Thirukural
1056 of 1330 –
திருக்குறள் 1056 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : இரவு.
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
Translation:
It those you find from evil of ‘denial’
free,
At once all plague of poverty will flee.
Explanation:
All the evil of begging will be removed at
the sight of those who are far from the evil of refusing.
கலைஞர் உரை:
இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக் கண்டாலே, இரப்போரின் வறுமைத் துன்பம் அகன்று விடும்.

[ads-post]
மு. உரை:
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.
சாலமன் பாப்பையா உரை:
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.
மணக்குடவர் உரை:
கரப்பிடும்பை இல்லாதரைக் காண்பாராயின், நிரப்பினான் ஆகிய இடும்பை யெல்லாம் ஒருங்கு கெடும். கரப்பிடும்பை யில்லார் என்றமையால் இது செல்வராயினார் மாட்டு இரக்க லாகா தென்றது.
பரிமேலழகர் உரை:
கரப்பு இடும்பை இல்லாரைக் காணின்உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்மானம்விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும். (‘கரத்தல்‘, ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனைநோய்என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், ‘எல்லாம் ஒருங்கு கெடும்என்றும் கூறினார். இடும்பைஆகுபெயர். ‘முழுதும் கெடும்என்று பாடம் ஓதிஎஞ்சாமற் கெடும்என்று உரைப்பாரும் உளர்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments