HomeUncategorizedThirukural 1066 of 1330 - திருக்குறள் 1066 of 1330

Thirukural 1066 of 1330 – திருக்குறள் 1066 of 1330

Thirukural
1066 of 1330 –
திருக்குறள் 1066 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : இரவச்சம்.
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.
Translation:
E’en if a draught of water for a cow you
ask,
Nought’s so distasteful to the tongue as
beggar’s task.
Explanation:
There is nothing more disgraceful to one’s
tongue than to use it in begging water even for a cow.
கலைஞர் உரை:
தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.

[ads-post]
மு. உரை:
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.
மணக்குடவர் உரை:
இப் பசுவிற்குத் தண்ணீர் தருமினென்று பிறரை இரப்பினும் நாவினுக்கு இரத்தல்போல இளிவரவு தருவது பிறிது இல்லை. இஃது அறத்திற்காக இரத்தலும் ஆகா தென்றது.
பரிமேலழகர் உரை:
ஆவிற்கு நீர் என்று இரப்பினும்தண்ணீர் பெறாது இறக்கும் நிலைமைத்தாயதோர் ஆவினைக் கண்டு, அறம் நோக்கி இதற்குத் தண்ணீர் தரல்வேண்டும் என்று இரந்து சொல்லுங்காலும்; இரவின் நாவிற்குஇளிவந்தது இல்‘ – அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிது இல்லை. (ஆகாத்தோம்பல் பேரறமாகலின், ‘ஆவிற்குஎன்றும், பொருள் கொடுத்துக் கொள்ள வேண்டாத எண்மைத்தாகலின்நீர்என்றும், இரக்கின்றானுக்கு இளிவு அச்சொல் அளவே ஆதலின்நாவிற்குஎன்றும், அதுதான் எல்லா இளிவினும் மேற்படுதலின், ‘இளி வந்தது இல்என்றும் கூறினார். இதனான் அறனும் முயன்று செய்வதல்லது இரந்து செய்யற்க என்பது கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments