HomeUncategorizedThirukural 1081 of 1330 - திருக்குறள் 1081 of 1330

Thirukural 1081 of 1330 – திருக்குறள் 1081 of 1330

Thirukural
1081 of 1330 –
திருக்குறள் 1081 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : களவியல். அதிகாரம் : தகையணங்குறுத்தல்.
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
Translation:
Goddess? or peafowl rare? She whose ears
rich jewels wear,
Is she a maid of human kind? All wildered
is my mind!.
Explanation:
Is this jewelled female a celestial, a
choice peahen, or a human being ? My mind is perplexed.
கலைஞர் உரை:
எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.

[ads-post]
மு. உரை:
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
சாலமன் பாப்பையா உரை:
அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.
மணக்குடவர் உரை:
இக்கனங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ? என்மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ?.
பரிமேலழகர் உரை:


(
தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது.) கனங்குழைஇக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல்இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல்அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர்கொல்அன்றி ஒருமானுட மாதரோ; என் நெஞ்சு மாலும்இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது. (அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற் சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். ‘கனங்குழை‘: ஆகுபெயர். ‘கணங்குழைஎன்ற பாடம் ஓதி, ‘பலவாய்த் திரண்ட குழைஎன்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றிஅணங்குகொல்என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, ‘ஆய்மயில்கொல்என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றிமாதர்கொல்என்றும் கூறினார்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments