HomeUncategorizedThirukural 1104 of 1330 - திருக்குறள் 1104 of 1330

Thirukural 1104 of 1330 – திருக்குறள் 1104 of 1330

Thirukural
1104 of 1330 –
திருக்குறள் 1104 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : களவியல். அதிகாரம் : புணர்ச்சிமகிழ்தல்.
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
Translation:
Withdraw, it burns; approach, it soothes
the pain;
Whence did the maid this wondrous fire
obtain?.
Explanation:
From whence has she got this fire that
burns when I withdraw and cools when I approach?.
கலைஞர் உரை:
நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்.

[ads-post]
மு. உரை:
நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?.
மணக்குடவர் உரை:
தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்றாள் இவள். இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று.
பரிமேலழகர் உரை:
(பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீதன்னை அகன்றுழிச் சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; இவள் யாண்டுப் பெற்றாள்என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள். (கூடாமுன் துன்புறுதலின்நீங்கின் தெறூஉம்என்றும், கூடியபின் இன்புறுதலின், ‘குறுகுங்கால் தண் என்னும்என்றும், இப்பெற்றியதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின்யாண்டுப் பெற்றாள்என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments