HomeUncategorizedThirukural 1142 of 1330 - திருக்குறள் 1142 of 1330

Thirukural 1142 of 1330 – திருக்குறள் 1142 of 1330

Thirukural
1142 of 1330 –
திருக்குறள் 1142 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : களவியல். அதிகாரம் : அலரறிவுறுத்தல்.
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
Translation:
The village hath to us this rumour giv’n,
that makes her mine;
Unweeting all the rareness of the maid with
flower-like eyne.

Explanation:
Not knowing the value of her whose eyes are
like flowers this town has got up a rumour about me.
கலைஞர் உரை:
அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.

 [ads-post]
மு. உரை:
மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.
சாலமன் பாப்பையா உரை:
மலர் போன்ற கண்களை உடையவளை நான் சந்திக்க வாய்ப்பு இல்லாததைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஊர் எங்கள் காதலைப் பேசியே எங்களுக்கு நன்மை செய்துவிட்டது.
மணக்குடவர் உரை:
பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே, இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார். எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்றவாறு.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாதுமலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்ததுஇவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது. (அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. ‘ஈந்ததுஎன்றான், தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றிஇவ்வூர்என்றான்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments