குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : தனிப்படர்மிகுதி.
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
Translation:
Love on one side is bad; like balanced load
By porter borne, love on both sides is
good.
good.
Explanation:
Lust, like the weight of the KAVADI, pains
if it lies in one end only but pleases if it is in both.
if it lies in one end only but pleases if it is in both.
கலைஞர் உரை:
காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.
[ads-post]
மு.வ உரை:
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.
மணக்குடவர் உரை:
ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது: காவினது பாரம்போல இரண்டு தலையும் ஒத்த அன்பினா லுண்டாகிய காமமே இனிதாவது. இது மேற்கூறிய சொற்கேட்ட தலைவர் அருள் செய்வாரென்றும் தெய்வக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்றும் தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) காமம் ஒரு தலையான் இன்னாது – மகளிர் ஆடவர் என்னும் இரு தலையினும் வேட்கை ஒருதலைக்கண்ணேயாயின், அஃது இன்னாது; காப்போல இருதலையானும் இனிது – காவினது பாரம்போல இருதலைக்கண்ணும் ஒப்பின் அஃது இனிது. (மூன்றன் உருபுகள் ஏழன் பொருண்மைக் கண் வந்தன. கா –ஆகுபெயர். ‘என்மாட்டு உண்டாய வேட்கை அவர் மாட்டும்உண்டாயின், யான் இவ்வாறு துன்பமுழத்தல் கூடுமோ‘?என்பதாம்.).




