HomeUncategorizedThirukural 1210 of 1330 - திருக்குறள் 1210 of 1330

Thirukural 1210 of 1330 – திருக்குறள் 1210 of 1330

Thirukural
1210 of 1330 –
திருக்குறள் 1210 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : நினைந்தவர்புலம்பல்.
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
Translation:
Set not; so may’st thou prosper, moon! that
eyes may see
My love who went away, but ever bides with
me.

Explanation:
May you live, O Moon! Do not set, that I
mine see him who has departed without quitting my soul.
கலைஞர் உரை:
நிலவே! நீ வாழ்க; இணைபிரியாமலிருந்து, பிரிந்து சென்றுள்ள காதலரை நான் என் கண்களால் தேடிக் கண்டுபிடித்திடத் துணையாக நீ மறையாமல் இருப்பாயாக.

[ads-post]
மு. உரை:
தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.
சாலமன் பாப்பையா உரை:
திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!.
மணக்குடவர் உரை:
என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இம்மதி. பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் காணலாமென்பது கருத்து. இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்தமுற்றதும் கூறினாளாம்.
பரிமேலழகர் உரை:
(வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது) மதிமதியே; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப்படாதிஎன் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக. (கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர் கண்ணும் அதன் கண்ணே சேர்தல். முதலோடு சினைக்கு ஒற்றுமை உண்மையின். ‘சென்றாரைக் காணஎன்றும் குறையுறுகின்றாளாகலின், ‘வாழிஎன்றும் கூறினாள். இனிப்படாதுஎன்பது பாடமாயின், கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிபடுகின்றதில்லை என அதனால் துயில் பெறாது வருந்துகினறாள் கூற்றாக்குக. இப்பொருட்குவாழிஎன்பது அசை நிலை).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments