HomeUncategorizedThirukural 1221 of 1330 - திருக்குறள் 1221 of 1330

Thirukural 1221 of 1330 – திருக்குறள் 1221 of 1330

Thirukural
1221 of 1330 –
திருக்குறள் 1221 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : பொழுதுகண்டிரங்கல்.
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
Translation:
Thou art not evening, but a spear that doth
devour
The souls of brides; farewell, thou evening
hour!.
Explanation:
Live, O you evening are you (the former)
evening? No, you are the season that slays (married) women.
கலைஞர் உரை:
நீ மாலைப் பொழுதாக இல்லாமல் காதலரைப் பிரிந்திருக்கும் மகளிர் உயிரைக் குடிக்கும் வேலாக இருப்பதற்காக உனக்கோர் வாழ்த்து!.

[ads-post]
மு. உரை:
பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!.
சாலமன் பாப்பையா உரை:
பொழுதே! நீ வாழ்க! முன்பெல்லாம் வருவாயே அந்த மாலையா நீ என்றால் இல்லை; திருமணம் செய்து கொண்ட பெண்களின் உயிரை வாங்கும் பொழுது நீ.
மணக்குடவர் உரை:
பொழுதே! நீ வெப்பமுடையை யானமையான் மாலையோ எனின் அல்லை: முன்பு கூடிப் பிரியப்பட்டார் உயிரை உண்பதாகியவொரு வேலாயிருந்தாய்.
இது மாலைப்பொழுது கண்டு தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.
பரிமேலழகர் உரை:

(
பொழுதொடு புலந்து சொல்லியது.) பொழுதுபொழுதே; நீ மாலையோ அல்லைநீ முன்னாள்களின் வந்த மாலையோ எனின் அல்லை; மணந்தார் உயிர் உண்ணும் வேலைஇருந்த ஆற்றான் அந்நாள் காதலரை மணந்த மகளிர் உயிரையுண்ணும் இறுதிக்காலமாய் இருந்தாய். (முன்னாள்கூடியிருந்த நாள். ‘அந்நாள் மணந்தார்எனவே, பின் பிரிந்தாராதல் பெறுதும். வாழி என்பது குறிப்புச் சொல். ‘வாலிழை மகளிர் உயிர்ப்பொதி அவிழ்க்குங்காலை‘ (கலித்.நெய்தல்.2) என்றாற்போல, ஈண்டுப் பொதுமையாற் கூறப்பட்டது. ‘மாலை நீ அல்லைஎனவும் பாடம். வேலை என்பது ஆகுபெயர். வேலை என்பதற்கு வேலாயிருந்தாய் என்பாரும் உளர்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments