HomeUncategorizedThirukural 1234 of 1330 - திருக்குறள் 1234 of 1330

Thirukural 1234 of 1330 – திருக்குறள் 1234 of 1330

Thirukural
1234 of 1330 –
திருக்குறள் 1234 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : உறுப்புநலனழிதல்.
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

Translation:
When lover went, then faded all their
wonted charms,
And armlets’ golden round slips off from
these poor wasted arms.

Explanation:
In the absence of your consort, your
shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure
gold have become loose.
கலைஞர் உரை:
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.

[ads-post]

மு. உரை:
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.

மணக்குடவர் உரை:
துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடாநின்றது. பசுத்த வளைமரகதத்தினாற் செய்த வளை. தோள் அழகழிதலேயன்றி மெலிவதுஞ் செய்யாநின்றதென்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள்அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும்இன்று அதற்கு மேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன, இவை இங்ஙனம் செயற்பாலவல்ல. (பெருமை இழத்தல்மெலிதல். பைந்தொடிபசிய பொன்னால்செய்த தொடி, ‘சோரும்என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. ‘அன்றும் பிரிந்தார்என்று அவரன்பின்மை உணர்த்தி, ‘இன்றும் குறித்த பருவத்து வந்திலர்என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; ‘இனிஅவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ‘? என்பதாம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments