HomeUncategorizedThirukural 1239 of 1330 - திருக்குறள் 1239 of 1330

Thirukural 1239 of 1330 – திருக்குறள் 1239 of 1330

Thirukural
1239 of 1330 –
திருக்குறள் 1239 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : உறுப்புநலனழிதல்.
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

Translation:
As we embraced a breath of wind found
entrance there;
The maid’s large liquid eyes were dimmed
with care.

Explanation:
When but a breath of breeze penetrated our
embrace, her large cool eyes became sallow.
கலைஞர் உரை:
இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.

[ads-post]

மு. உரை:
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

சாலமன் பாப்பையா உரை:
(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?.

மணக்குடவர் உரை:
யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின்கண்ணே எனது உடம்பை அகற்ற, அம்முயக்கிடையே சிறு காற்று ஊடறுத்தலானே எனது நீக்கத்தைப் பொறாது பேதையுடைய பெருத்த குளிர்ந்த கண்கள் பசப்புற்றன. இது முதலாக மூன்று குறள் தலைமகன் கூறுவன.

பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) முயக்கிடைத் தண் வளி போழஅங்ஙனம் கைகளை ஊக்குதலான் அம் முயக்கிடையே சிறுகாற்று நுழைந்ததாக; பேதை பெருமழைக்கண் பசப்புற்றஅத்துணையிடையீடும் பொறாது, பேதையுடைய பெரிய மழைக் கண்கள் பசப்புற்றன; அத்தன்மையவான கண்கள், மலைகளும் காடும் நாடுமாய இவ்விடையீடுகளையெல்லாம் யாங்ஙனம் பொறுத்தன? (தண்மைஈண்டு மென்மைமேல் நின்றது. ‘போழஎன்றது, உடம்பு இரண்டும் ஒன்றானது தோன்ற நின்றது. மழைகுளிர்ச்சி).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments