HomeUncategorizedThirukural 1257 of 1330 - திருக்குறள் 1257 of 1330

Thirukural 1257 of 1330 – திருக்குறள் 1257 of 1330

Thirukural
1257 of 1330 –
திருக்குறள் 1257 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : நிறையழிதல்.
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
Translation:
No sense of shame my gladdened mind shall
prove,
When he returns my longing heart to bless
with love.
Explanation:
I know nothing like shame when my beloved
does from love (just) what is desired (by me).
கலைஞர் உரை:
நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.

[ads-post]
மு. உரை:
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.
சாலமன் பாப்பையா உரை:
என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.
மணக்குடவர் உரை:
நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின். அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகா தென்றவாறு.
பரிமேலழகர் உரை:
(பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள்நீ புலவாமைக்குக் காரணம் யாது?’ என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணியார் காமத்தாற் பெட்பசெயின்நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம்நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம். (‘பேணியார்எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியனவேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண்பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். ‘ஒன்றுஎன்பது ஈண்டுச்சிறிதுஎன்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments