HomeUncategorizedThirukural 1265 of 1330 - திருக்குறள் 1265 of 1330

Thirukural 1265 of 1330 – திருக்குறள் 1265 of 1330

Thirukural
1265 of 1330 –
திருக்குறள் 1265 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : அவர்வயின்விதும்பல்.
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
Translation:
O let me see my spouse again and sate these
longing eyes!
That instant from my wasted frame all
pallor flies.
Explanation:
May I look on my lover till I am satisfied
and thereafter will vanish the sallowness of my slender shoulders.
கலைஞர் உரை:
கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.

[ads-post]
மு. உரை:
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.
மணக்குடவர் உரை:
என்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும். இது காண்டல் வேட்கையால் கூறியது.
பரிமேலழகர் உரை:
(தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்கஎன் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக;
கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும்அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும். (‘காண்கஎன்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின்மன்ஒழியிசைக்கண்வந்தது. ‘கேட்ட துணையான் நீங்காதுஎன்பதாம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments