HomeUncategorizedThirukural 127 of 1330 - திருக்குறள் 127 of 1330

Thirukural 127 of 1330 – திருக்குறள் 127 of 1330

Thirukural
127 of 1330 –
திருக்குறள் 127 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
அடக்கமுடைமை.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
Translation:
Whate’er they fail to guard, o’er lips men
guard should keep;
If not, through fault of tongue, they
bitter tears shall weep.
Explanation:
Whatever besides you leave unguarded, guard
your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.
கலைஞர் உரை:
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

[ads-post]
மு. உரை:
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.
மணக்குடவர் உரை:
எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக: அதனை அடக்காக்காற் சொற்சோர்வுபட்டுத் தாமே சோகிப்பா ராதலான். இது சோகத்தின்மாட்டே பிணிக்கப் படுவரென்பது.
பரிமேலழகர் உரை:
யாகாவாராயினும் நாகாக்கதம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க, காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர்அதனைக் காவாராயின் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர்அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர். (‘யாஎன்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணர நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம்சொல்லின்கண் தோன்றும் குற்றம். ‘அல்லாப்பர்செம்மாப்பர்என்பன போலச்சோகாப்பர்
என்பது ஒரு சொல்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments