HomeUncategorizedThirukural 1273 of 1330 - திருக்குறள் 1273 of 1330

Thirukural 1273 of 1330 – திருக்குறள் 1273 of 1330

Thirukural
1273 of 1330 –
திருக்குறள் 1273 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : குறிப்பறிவுறுத்தல்.
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.
Translation:
As through the crystal beads is seen the
thread on which they ‘re strung
So in her beauty gleams some thought cannot
find a tongue.
Explanation:
There is something that is implied in the
beauty of this woman, like the thread that is visible in a garland of gems.
கலைஞர் உரை:
மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

[ads-post]
மு. உரை:
(கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.
மணக்குடவர் உரை:
கோவைப்பட்ட நீலமணியின்கண்ணே தோற்றுகின்ற நூல்போல, இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உணடு. அழகுபுணர்ச்சியால் வந்த அழகுபோலுமென்னும் குறிப்பு.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) மணியில் திகழ்தரும் நூல்போல்கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டுஇம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு. (அணிபுணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். ‘அதனை யான்அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்‘, என்பது கருத்து.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments