HomeUncategorizedThirukural 1278 of 1330 - திருக்குறள் 1278 of 1330

Thirukural 1278 of 1330 – திருக்குறள் 1278 of 1330

Thirukural
1278 of 1330 –
திருக்குறள் 1278 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : குறிப்பறிவுறுத்தல்.
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
Translation:
My loved one left me, was it yesterday?
Days seven my pallid body wastes away!.
Explanation:
It was but yesterday my lover departed
(from me); and it is seven days since my complexion turned sallow.
கலைஞர் உரை:
நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.

[ads-post]
மு. உரை:
எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
சாலமன் பாப்பையா உரை:
என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.
மணக்குடவர் உரை:
எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம். இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) எம் காதலர் சென்றார் நெருநற்றுஎம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனி பசந்து எழுநாளேம்அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம். (‘நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டதுஎன்பாள், ‘நெருநற்றுச் சென்றார்என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். ‘மேனி பசந்து எழுநாளேம்என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments