HomeUncategorizedThirukural 1287 of 1330 - திருக்குறள் 1287 of 1330

Thirukural 1287 of 1330 – திருக்குறள் 1287 of 1330

Thirukural
1287 of 1330 –
திருக்குறள் 1287 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : புணர்ச்சிவிதும்பல்.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
Translation:
As those of rescue sure, who plunge into
the stream,
So did I anger feign, though it must
falsehood seem?.
Explanation:
Like those who leap into a stream which
they know will carry them off, why should a wife feign dislike which she knows
cannot hold out long?.
கலைஞர் உரை:
வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

[ads-post]
மு. உரை:
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:
தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?.
மணக்குடவர் உரை:
தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?. இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போலதம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? – புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? (‘பாய்பவர்என்பது ஆகுபெயர். பொய்த்தல்புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். ‘பொய்த்தல் அறிந்தேன்என்பது பாடமாயின், ‘உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று எனஉரைக்க.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments