HomeUncategorizedThirukural 1293 of 1330 - திருக்குறள் 1293 of 1330

Thirukural 1293 of 1330 – திருக்குறள் 1293 of 1330

Thirukural
1293 of 1330 –
திருக்குறள் 1293 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : நெஞ்சொடுபுலத்தல்.
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
Translation:
‘The ruined have no friends, ‘they say; and
so, my heart,
To follow him, at thy desire, from me thou
dost depart.
Explanation:
O my soul! do you follow him at pleasure
under the belief that the ruined have no friends?.
கலைஞர் உரை:
நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?.

[ads-post]
மு. உரை:
நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?.
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நீ என்னிடத்து நில்லாது வேண்டின வண்ணமே அவர் பின்பே செல்கின்றது, கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) நெஞ்சேநெஞ்சே; நீ பெட்டாங்கு அவர்பின் செலல்என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர்மாட்டுச் செல்லுதற்குக் காரணம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ? – கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ? நின்னியல்போ? கூறுவாயாக. (‘என்னை விட்டு அவர்மாட்டுச் சேறல் நீ பண்டே பயின்றது‘, என்பாள், ‘பெட்டாங்குஎன்றும், தான் இதுபொழுது மானமிலளாகலின், ‘கெட்டார்க்குஎன்றும் கூறினாள். ‘பின்என்பது ஈண்டு இடப் பொருட்டு. ‘செலல்என்பது ஆகுபெயர். ‘ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு‘ (கலித்,பாலை 25)ஆயிற்று, நின் தொடர்பு என்பதாம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments