HomeUncategorizedThirukural 139 of 1330 - திருக்குறள் 139 of 1330

Thirukural 139 of 1330 – திருக்குறள் 139 of 1330

Thirukural
139 of 1330 –
திருக்குறள் 139 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
ஒழுக்கமுடைமை.
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
Translation:
It cannot be that they who ‘strict
decorum’s’ law fulfil,
E’en in forgetful mood, should utter words
of ill.
Explanation:
Those who study propriety of conduct will
not speak evil, even forgetfully.
கலைஞர் உரை:
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.

[ads-post]
மு. உரை:
தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் கூறுவது, ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது.
மணக்குடவர் உரை:
தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும் தம்வாயாற் சொல்லுதல் ஒழுக்க முடையார்க்கு இயலாது.
பரிமேலழகர் உரை:
வழுக்கியும் தீய வாயால் சொலல்மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாஒழுக்கம் உடையவர்க்கு முடியா. (தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. சொல் சாதியொருமை. சொல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார், ‘நல்ல சொற்கள் பயின்றதுஎனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார்தாற்பரியம்என்ப.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments