HomeUncategorizedThirukural 14 of 1330 - திருக்குறள் 14 of 1330

Thirukural 14 of 1330 – திருக்குறள் 14 of 1330

Thirukural
14 of 1330 –
திருக்குறள் 14 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால்.
குறள் இயல் :
 
பாயிரவியல்.
அதிகாரம் : வான்சிறப்பு.
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
Translation:
If
clouds their wealth of waters fail on earth to pour,
The
ploughers plough with oxen’s sturdy team no more.
Explanation:
If
the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must
cease.
கலைஞர் உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

[ads-post]

மு. உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.
மணக்குடவர் உரை:
ஏரினுழுதலைத் தவிர்வாருழவர், புயலாகிய வாரியினுடைய வளங்குறைந்தகாலத்து. இஃது உழவாரில்லை யென்றது.
பரிமேலழகர் உரை:
உழவர் ஏரின் உழார்உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால்மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின். (‘குன்றியக்கால்என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.) .



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments