HomeUncategorizedThirukural 145 of 1330 - திருக்குறள் 145 of 1330

Thirukural 145 of 1330 – திருக்குறள் 145 of 1330

Thirukural
145 of 1330 –
திருக்குறள் 145 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
பிறனில் விழையாமை.
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
Translation:
‘Mere triflel’ saying thus, invades the
home, so he ensures.
A gain of guilt that deathless aye endures.
Explanation:
He who thinks lightly of going into the
wife of another acquires guilt that will abide with him imperishably and for
ever.
கலைஞர் உரை:
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

[ads-post]
மு. உரை:
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
சாலமன் பாப்பையா உரை:
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.
மணக்குடவர் உரை:
தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான். இது பழியுண்டா மென்றது.
பரிமேலழகர் உரை:
எளிது என இல் இறப்பான் – ‘எய்துதல் எளிதுஎன்று கருதிப் பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும் நிற்கும் பழி எய்தும்மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும் குடிப்பழியினை எய்தும். (இல்லின்கண் இறத்தல்இல்லாள்கண் நெறிகடந்து சேறல்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments