குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
புறங்கூறாமை.
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
புறங்கூறாமை.
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
Translation:
Whose
nature bids them faults of closest friends proclaim
nature bids them faults of closest friends proclaim
What
mercy will they show to other men’s good name?.
mercy will they show to other men’s good name?.
Explanation:
What
will those not do to strangers whose nature leads them to publish abroad the
faults of their intimate friends ?.
will those not do to strangers whose nature leads them to publish abroad the
faults of their intimate friends ?.
கலைஞர் உரை:
நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற குணமுடையவர்கள் அப்படிப் பழகாத அயலாரைப் பற்றி என்னதான் பேச மாட்டார்கள்?.
[ads-post]
மு.வ உரை:
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும் இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?.
சாலமன் பாப்பையா உரை:
தன்னோடு நெருக்கமானவர்களின் குற்றத்தையும் அவர் இல்லாத நேரம் பேசும் இயல்புடையவர்கள், அயலார் காரியத்தில் என்னதான் பேசமாட்டார்கள்!.
மணக்குடவர் உரை:
தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்ற சேதியை யுடையார் செறிவில்லாதார்மாட்டு யாங்ஙனஞ் செய்வாரோ? இது யாவரோடும் பற்றிலரென்றது.
பரிமேலழகர் உரை:
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் – தம்மொடு செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும்
இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை கொல் – அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ? (‘தூற்றுதல்‘ பலரும் அறியப் பரப்புதல். அதனின் கொடியது பிறிதொன்று காணாமையின், ‘என்னைகொல்‘ என்றார். ‘செய்வது என்பது சொல்லெச்சம்‘. ‘என்னர் கொல்‘ என்று பாடம் ஓதி, ‘எவ்வியல்பினராவர்‘ என்று உரைப்பாரும் உளர்.).