குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
பயனில சொல்லாமை.
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
பயனில சொல்லாமை.
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
Translation:
Words
without sense, where many wise men hear, to pour
without sense, where many wise men hear, to pour
Than
deeds to friends ungracious done offendeth more.
deeds to friends ungracious done offendeth more.
Explanation:
To
speak useless things in the presence of many is a greater evil than to do
unkind things towards friends.
speak useless things in the presence of many is a greater evil than to do
unkind things towards friends.
கலைஞர் உரை:
பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்.
[ads-post]
மு.வ உரை:
பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
மணக்குடவர் உரை:
பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை மகனென்னாதொழிக; மக்களில் பதரென்று சொல்லுக, இது மக்கட் பண்பிலனென்றது.
பரிமேலழகர் உரை:
பயன் இல பல்லார்முன் சொல்லல் – பயன் இலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல், நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது – விருப்பம் இலவாகிய செயல்களைத் தன் நட்டார் மாட்டுச் செய்தலினும் தீது. (‘விருப்பமில‘ – வெறுப்பன. இச் சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.).




