குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
பயனில சொல்லாமை.
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
பயனில சொல்லாமை.
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
Translation:
The
wise who weigh the worth of every utterance,
wise who weigh the worth of every utterance,
Speak
none but words of deep significance.
none but words of deep significance.
Explanation:
The
wise who seek after rare pleasures will not speak words that have not much
weight in them.
wise who seek after rare pleasures will not speak words that have not much
weight in them.
கலைஞர் உரை:
அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்.
[ads-post]
மு.வ உரை:
அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.
மணக்குடவர் உரை:
அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார்; பெரிய பயனில்லாத சொற்களை, இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் இதனை யறிவுடையார் கூறாரென்றது.
பரிமேலழகர் உரை:
அரும்பயன் ஆயும் அறிவினார் – அறிதற்கு அரிய பயன்களை
ஆராயவல்ல அறிவினையுடையார், பெரும்பயன் இல்லாத சொல் சொல்லார் – மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார். (அறிதற்கு அரிய பயன்களாவன, வீடு பேறும், மேற்கதிச் செலவும் முதலாயின. ‘பெரும்பயன் இல்லாத‘ எனவே பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.).