குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
தீவினையச்சம்.
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
தீவினையச்சம்.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
Translation:
With sinful act men cease to feel the dread
of ill within,
of ill within,
The excellent will dread the wanton pride
of cherished sin.
of cherished sin.
Explanation:
Those who have experience of evil deeds
will not fear, but the excellent will fear the pride of sin.
will not fear, but the excellent will fear the pride of sin.
கலைஞர் உரை:
தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.
[ads-post]
மு.வ உரை:
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
சாலமன் பாப்பையா உரை:
தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.
மணக்குடவர் உரை:
என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.
பரிமேலழகர் உரை:
தீவினை என்னும் செருக்கு – தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் – முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் – அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். (‘தீவினை என்னும் செருக்கு‘ எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் ‘அஞ்சார்‘ என்றும், செய்து அறியாமையான் ‘அஞ்சுவர்‘ என்றும் கூறினார்.).




