HomeUncategorizedThirukural 205 of 1330 - திருக்குறள் 205 of 1330

Thirukural 205 of 1330 – திருக்குறள் 205 of 1330

Thirukural
205 of 1330 –
திருக்குறள் 205 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
தீவினையச்சம்.
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
Translation:
Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.
Explanation:
Commit not evil, saying, “I am
poor”: if you do, you will become poorer still.
கலைஞர் உரை:
வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் .டுபடக்கூடாது; அப்படி .டுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.

[ads-post]
மு. உரை:
யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
சாலமன் பாப்பையா உரை:
தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.
மணக்குடவர் உரை:
நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக; செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது. இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.
பரிமேலழகர் உரை:
இலன் என்று தீயவை செய்யற்கயான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக, செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும்செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம். (அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மைஉளனா என் உயிரை உண்டு‘ (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்றுஅசை நிலை. ‘இலம்என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments