HomeUncategorizedThirukural 221 of 1330 - திருக்குறள் 221 of 1330

Thirukural 221 of 1330 – திருக்குறள் 221 of 1330

Thirukural
221 of 1330 –
திருக்குறள் 221 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
ஈகை.
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
Translation:
Call that a gift to needy men thou dost
dispense,
All else is void of good, seeking for
recompense.
Explanation:
To give to the destitute is true charity.
All other gifts have the nature of (what is done for) a measured return.
கலைஞர் உரை:
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

[ads-post]
மு.வ உரை:
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.
சாலமன் பாப்பையா உரை:
ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.
மணக்குடவர் உரை:
ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதலையுடைத்து. இது கொடுக்குங்கால் இல்லார்க்குக் கொடுக்கவேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை – ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது, மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து – அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து. (ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது. ‘நீரது‘ என்புழி, ‘அது‘ என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், ‘குறியெதிர்ப்பை நீரது உடைத்து‘ என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.).

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments