HomeUncategorizedThirukural 243 of 1330 - திருக்குறள் 243 of 1330

Thirukural 243 of 1330 – திருக்குறள் 243 of 1330

Thirukural
243 of 1330 –
திருக்குறள் 243 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : அருளுடைமை.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
Translation:
They in whose breast a ‘gracious
kindliness’ resides,
See not the gruesome world, where darkness
drear abides.
Explanation:
They will never enter the world of darkness
and wretchedness whose minds are the abode of kindness.
கலைஞர் உரை:
அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்.

[ads-post]
மு. உரை:
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
அருள் நிறைந்த நெஞ்சத்தவர்க்கு, இருட்டான, துன்ப உலகமாகிய நரகம் புகும் நெருக்கடி இல்லை.
மணக்குடவர் உரை:
அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை. இது நரகம் புகாரென்றது.
பரிமேலழகர் உரை:
இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல்இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லைஅருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. (‘இருள் செறிந்த துன்ப உலகம்என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், ‘உலகம்எனப்பட்டது.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments