HomeUncategorizedThirukural 276 of 1330 - திருக்குறள் 276 of 1330

Thirukural 276 of 1330 – திருக்குறள் 276 of 1330

Thirukural
276 of 1330 –
திருக்குறள் 276 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
கூடாவொழுக்கம்.
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
Translation:
In
mind renouncing nought, in speech renouncing every tie,
Who
guileful live,- no men are found than these of ‘harder eye’.
Explanation:
Amongst
living men there are none so hard-hearted as those who without to saking
(desire) in their heart, falsely take the appearance of those who have forsaken
(it).
கலைஞர் உரை:
உண்மையிலேயே மனதாரப் பற்றுகளைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை.

[ads-post]

மு. உரை:
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல் துறந்தவரைப் போல் வஞ்சனைச் செய்து வாழ்கின்றவரைப் போல் இரக்கமற்றவர் எவரும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.
மணக்குடவர் உரை:
நெஞ்சிற் றுறவாராய்த் துறந்தாரைப் போல வஞ்சனை செய்து வாழுமவர்களைப் போலக் கொடியா ரில்லை யுலகத்து.
பரிமேலழகர் உரை:
நெஞ்சின் துறவார்நெஞ்சால் பற்று அறாது வைத்து, துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின்பற்று அற்றார் போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர் போல், வன்கணார் இல்வன்கண்மையையுடையார் உலகத்து இல்லை. (தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, ‘யாம் மறுமைக்கண் தேவராற்பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது ஈதும்என்று அறியாது ஈந்தாரை, அதுகொண்டு இழிபிறப்பினராக்குதல். ‘அடங்கலர்க்கு ஈந்த தானப் பயத்தினால் அலறும் முந்நீர்த்தடங்கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி உடம்போடு முகங்கள் ஒவ்வார் ஊழ்கனி மாந்தி வாழ்வர்மடங்கலஞ் சீற்றத்துப் பின் மானவேல் மன்னர் ஏறே‘ (சீவக. முத்தி – 244) என்பதனால் அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின்வன்கணார் இல்என்றார்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments