HomeUncategorizedThirukural 28 of 1330 - திருக்குறள் 28 of 1330

Thirukural 28 of 1330 – திருக்குறள் 28 of 1330

Thirukural
28 of 1330 –
திருக்குறள் 28 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
பாயிரவியல். அதிகாரம் :
நீத்தார் பெருமை.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
Translation:
The
might of men whose word is never vain,
The
‘secret word’ shall to the earth proclaim.
Explanation:
The
might of men whose word is never vain, The ‘secret word’ shall to the earth
proclaim.
கலைஞர் உரை:
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

[ads-post]

மு. உரை:
பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.
மணக்குடவர் உரை:
நிரம்பிய கல்வியுடைய மாந்தரது பெருமையை அவராற் சொல்லப்பட்டு நிலத்தின்கண் வழங்காநின்ற மந்திரங்களே காட்டும். இஃது அவராணை நடக்குமென்று கூறிற்று.
பரிமேலழகர் உரை:
நிறைமொழி மாந்தர் பெருமைநிறைந்த மொழியினை உடைய துறந்தாரது பெருமையை; நிலத்து மறைமொழி காட்டிவிடும்நிலவுலகத்தின்கண் அவர் ஆணையாகச் சொல்லிய மந்திரங்களே கண்கூடாகக் காட்டும். (‘நிறைமொழிஎன்பது, அருளிக் கூறினும், வெகுண்டு கூறினும், அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி. காட்டுதல்! பயனான் உணர்த்துதல்.).



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments